Hottest June day in 3 years and its not a surprise as Chennai June month Temp is almost similar to May

By Tamil Nadu Weatherman on 03 Jun 2017 | read
    013

=================Wondering why Chennai is still so hot after Kathri as Chennai Temperature touched 40 C after three years in June. Sea Breeze has set now and we can see a drop in Temp in the City. Here is the climatology of Chennai Temperature for all months. You can see there is hardly any difference between May and June average temperature. Though we may not see heat waves in June. June remains as hot as May month with increase in humidity, June is more sultry than May. Yesterday Kanyakumari, Nilgiris, Vellore, Krishangiri, Trichy, Karur and Villupuram districts got rains. The rainfall total will be put up later. Today too many places in the interior Tamil Nadu will get rains due to Veppa Salanam. While Kanyakumari, Valaprai and Nilgiri belt will get monsoon rainfall. Maybe if time permits i will put up a detailed post in the late noon. We can see Why Tamil Nadu is so unlucky and we fall in Leeward Side and how western ghats block all the moisture. All we get veppa salanam rains at evenings / night due to heat.First Convectional Rains in Chennai is getting closer. Any day we might see our first good Thunderstorm. I want to be the first person to break that too you. Last week one surprise clouds gave rains only in North Chennai. Its time for one widespread Thunder storm but you have to know that based on Chennai June average rainfall, it is not also our strong month for rains. But things looks better than May. Surely we will see three to 4 days of rainfall in June.கடந்த 3 வருடத்தில் வெப்பமான ஜூன் மாத தினம். இதில் ஒன்றும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை. ஜூன் மாத வெப்ப நிலை மே மாதத்தை போன்றதே.கத்திரி வெயில் முடிந்தாலும் 3 வருடத்திற்கு பிறகு ஜூன் மாதத்தில் 40 C வெயில் அடித்தது ஆச்சரியமாக இருக்கலாம். இப்போது கடல் காற்று வீச தொடங்கி விட்டது. இதனால் வெப்பம் போக போக இன்று தணியும். கடந்த பல வருட கால சராசரி வெப்ப நிலைகளை பார்க்கும் பொது மே மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஒரு ஆறுதல் வெப்ப அலை ஜூன் மாதத்தில் இருக்காது. மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் புழுக்கம் அதிகமாக இருக்கும்.நேற்று கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்தது. எவ்வளவு மழை நேற்று பெய்தது என்பதை கூடிய சீக்கிரம் வெளியிடுகிறேன்.இன்றும் வெப்ப சலன மழையை தமிழ் நாட்டின் உள் மாவட்டங்களில் எதிர் பார்க்கலாம். கன்னியாகுமாரி, வால்பாறை மற்றும் நீலகிரி பகுதிகளில் பருவ மழையை எதிர் பார்க்கலாம்.நேரம் இருக்குமானால் இன்று மாலை விரிவான அறிக்கையை வெளியிடுகிறேன். துரதிஷ்டவசமாக தமிழ் நாடு காற்று மறைவு பகுதியில் அமைந்து இருக்கிறது. மேற்கு தொடச்சி மலை ஈரத்தை தடுப்பதினால் நமக்கு வெப்ப சலன மழையை மட்டுமே எதிர் பார்க்க முடியும். அதுவும் சாயங்காலம் அல்லது இரவு நேரங்களில் மட்டுமே வெப்பத்தினால் வெப்ப சலன மழையை எதிர் பார்க்கலாம்.வெப்ப சலன மழை சென்னையை பொறுத்த வரை விரைவில் வர இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் சென்னை மக்கள் நல்ல இடியுடன் கூடிய மழையை எதிர் பார்க்கலாம். அதை நான் முதல் ஆளாக வெயியிட ஆவலாக உள்ளேன். கடந்த வாரம் ஆச்சரியபட தக்க அளவில் வட சென்னை மழையை பெற்றது. இப்போது பரவலாக சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஜூன் மாத சராசரி மழை அளவை பார்த்தால் ஜூன் மாதம் அப்படி ஒன்றும் வலுவான மழை மாதமாக இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் மே மாதத்தை ஒப்பிடும் போது இப்போது கால நிலை நன்றாக இருக்கிறது. ஆகவே இந்த ஜூன் மாதத்தில் சென்னையில் 3 அல்லது 4 மழை தினங்களை எதிர் பார்க்கலாம்.Tamil Translation courtesy : Shahul Hameed

 

Comments