நீர்ப்பாசனக் குளங்களில் மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு

By KRISHI JAGRAN on 15 Apr 2019 | read
    03


புரதத்தின் மிகப்பெரிய ஆதாரமாக மீன் அமைகிறது. மீனில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நல்ல செரிமானத்திற்கு ஆதாரமாக உள்ளன. கொழுப்பு சக்தி குறைந்தது, மீனில் ஒமேகா 3  கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி,மற்றும் பி 2 உள்ளது. மீன் என்றாலே அனைவரும் கூறும் விஷயம்  மீன் கண்ணுக்கு நல்லது, கண்ணனுக்கு மட்டுமன்றி பற்கள், எலும்புகளுக்கும் சிறந்ததாக விளங்குகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து மார்படைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை குறைக்கிறது.

இறைச்சி உணவில் மீன் மிக சிறந்தது. கொழுப்பு குறைவாகவும் அதிக புரதங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் மீன் சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

நீளப்  புரட்சியில் இருந்து அதிகரிக்கும் மீன் உற்பத்தி

அரசு மூலம் மேற்கொள்ளும் நீளப்  புரட்சியின் பங்கு பெரும் அளவு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகள் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றிய முழு தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. மீன் உற்பத்திக்கு நல்ல மற்றும் பாராட்டத்தக்க வேலை செய்ய 21 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் நிறைய விவசாயிகள் இருந்தனர். இந்த நேரத்தில் பல விவசாயிகள் மற்றும் பிற மாநில விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

நீர்ப்பாசனக் குளங்களில் மீன் வளர்ப்பு

 இந்தியாவில் மீன் வளத்திற்கு பேர்போனது தமிழ்நாடு. மீன் வளத்தை பெருகுவதிலும், பாதுகாப்பதிலும் பல உயரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்தல், வளர்த்தல், தரமான மீன் உணவு பொருட்களை விற்பனை செய்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. நிலையான  மீன் உற்பத்திக்காக  மாநிலத்தின் 8 நீர் தேக்கங்களில் மீன் குஞ்சுகளின்  இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது. அலங்கார மீன் வளர்ப்பு உற்பத்தியிலும் தமிழ்நாடு மீன் வளத்துறை  பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மீன் வளர்ப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் எத்தகைய நீர் நிலையிலும் மீன்வளர்ப்பு மேற்கொள்ள முடியும் என்ற அளவிற்கு மீன்வளத்தொழில் நுட்பம் பெருகியுள்ளது. கூட்டு மீன்வளர்ப்பிற்கு குறைந்தபட்ச அளவான எக்டருக்கு மூவாயிரம் குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச்செய்து வளர்ப்பதன் மூலம் குறைந்த தண்ணீர் காலங்களில் மீன்கள் மடிவது  தவிர்க்கப்படுவதோடு, மீன்களிடையே நல்ல வளர்ச்சியும், உற்பத்தியும் பெற இயலும்.

நோக்கங்கள்

  • பொருளாதார வளர்ச்சி.
  • உணவு மட்டும் ஊட்டச்சத்து பாதுகாப்பு.
  • வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வருவாயை உருவாக்குதல்.
  • புதிய தொழில் நுட்பங்களுக்கான சிறந்த திட்டங்கள். 

 

Comments