Easterly Wave Update - Tamil Nadu coast including Chennai will get moderate rains between 21-24th December with lots of spells and no flooding type rains can be expected

By Tamil Nadu Weatherman on 20 Dec 2017 | read
    015
So enjoy the rains.
====================
Days are nearing to forget me till the next monsoon, before that we might get some spell of rains before X'mas. There is No Low Pressure in Bay of Bengal, its purely an Easterly Wave (Trough) which is going to give rains to coastal belt of TN from tomorrow for next three / four days from 21st December. Rains will start in most places by tomorrow. One day the interior districts may get some spells. But most of the coastal belt will get bulk of the rains.

Chennai might get rains for atleast 2 days. But dont expect too much out of these spells. Enjoy the rains. Do carry the rain coat with you for next 3-4 days.

***************************************

கிழக்குதிசையில் இருந்து காற்று கிளம்பவுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் 21ந்தேதி முதல் 24ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஆனால், வெள்ளம் வரும் அளவுக்கு கனமழை பெய்யாது. மழையை அனுபவியுங்கள்….
==========================
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக நமக்கு மழை கண்டிப்பாக இருக்கும். வங்காள விரிகுடா கடலில் எந்தவிதமான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைக்கும் இப்போது வாய்ப்பு இல்லை. ஆதலால், இந்த மழையை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் உருவாகும் மழை என நினைக்க வேண்டாம்.

இந்த மழை என்பது கிழக்கில் இருந்து வரும் காற்றால் உருவாகும் மழையாகும். நாளை முதல் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் மழை இருக்கும். பெரும்பாலான கடற்கரைப்பகுதிகளில் நாளையில் இருந்தே மழை தொடங்கிவிடும்.

உள்மாவட்டங்களில் ஒரு நாள் மட்டுமே மழை இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் கடற்கரை பகுதிகளிலேயே அதிகமான மழை இருக்கும்.

சென்னைக்கு மழை எப்படி - சென்னையைப் பொருத்தவரை
குறைந்தபட்சம் 2 நாட்களுக்காவது மழை பெய்யக்கூடும். ஆனால், கனமழைக்கோ, மிககனமழைக்கோ வாய்ப்பு இல்லை. மழையை அனுபவியுங்கள். அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் வெளியே செல்லும் போது, மறக்காமல் ரெயின் கோட், அல்லது குடையை உடன் எடுத்துச் செல்லவும.

Tamil Translation Courtesy - Mr.Pothy Raj.
 

Comments