வாத்து வளர்ப்பு மற்றும் பராமரிக்கும் முறை

By KRISHI JAGRAN on 02 May 2019 | read
    05

வாத்துக்களில் பல இனங்கள் உள்ளன. இதில் தமிழ் நாட்டில் வளரும் முக்கிய இனமானது ஆரணி இன வாத்து. இது தமிழ்நாட்டில் அதிகமாக வேலூர், காஞ்சிபுரம், பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. 

வளரும் இடம்:

நீர்வளம் அதிகம் உள்ள இடங்களில் வாத்து வளர்ப்பை அதிகம் காணலாம். மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு செயற்கையான குட்டை, குளம்  போன்று அமைப்பது வளர்ப்பிற்கு நல்லது.

உணவு:

வாத்துக்களை மேய்ச்சலுக்கு கூட்டிச்செல்லும் போது குளம் குட்டைகளில்  இருக்கும் பாசி, மண்புழு, நண்டு, நத்தை, ஆகியதை உணவாகக் கொண்டு தேவையான உணவு ஊட்டச்சத்து கிடைத்தது. ஆனால் இன்று குளங்கள், குட்டைகள் வற்றிய நிலையில் வீட்டில் உள்ள அருசி, சிறுதானியங்கள் போடலாம்.

வாத்தின் ஆயுட்காலம்:

காடுகளில் வளர்க்கும் வாத்துகளுக்கு ஆயுட்காலம் மூன்றுவருடம். மேலும் இதை மேய்ச்சலுக்குக் கூட்டிச்செல்ல படும்போது தினமும் நடப்பதன்  காரணமாக கால்கள் வீக்கமடைந்து சத்து குறைந்து விடுகிறது. பின் அதனை கறிக்கு  கொடுத்து விடுவார்கள். மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு ஆயுட்காலம் பத்து வருடமாகும்.

வாத்து முட்டை:      

நெல் பயிர்களை அறுவடை செய்த பிறகு அந்த இடத்தில வாத்துக்களை மேய்ச்சலுக்கு விடும்போது, பற்றாக்குறையில்லாத தேவையான உணவு கிடைப்பதன் மூலம் வாத்து அதிகாலை ஒன்றில் இருந்து ஐந்து மணிக்குள் முட்டை இடும். மற்றும் இப்பொழுது ஊட்டச்சத்து குறைபாடு காரணத்தால் ஆறு, ஏழு, மணிகளில் முட்டை போட்டு விட்டு சென்றுவிடுகிறது. மற்றும் நம் தாத்தா காலத்தில் வாத்து முட்டையின் அளவு பெரிதாக இருக்குமாம், ஆனால் உணவு பற்றாக்குறை காரணமாக இப்பொழுது கோழி முட்டையை  விட சிறிதளவு தான் வாத்து முட்டை பெரிது. வாத்து முட்டையின் அளவு எழுவது கிராம் ஆனால் இப்போது ஐம்பது கிராம் கிடைப்பதே அதிசயம். ஒரு வருடத்தில் 365 நாட்களில் வாத்து 150 ல் இருந்து 200 முட்டைகள் மட்டும் தான் இடும். மற்றும் மூன்று வருடத்திற்கு மேல் முட்டை இடாது. ஏனெனில் அதன் சத்து குறைந்து விடுவதன் காரணத்தால் உயிர்வாழ்வது கடினமாகிவிடுகிறது.


இனப்பெருக்கம்:

இனப்பெருக்கத்திற்கு 8 பெண் வாத்துகளுக்கு 1 ஆன் வாத்து என்று வளர்ப்பர். மேலும் 20ல் இருந்து 22 வாரத்திலேயே முட்டை இட ஆரம்பித்து விடும். 

கோழி வளர்ப்பை விட வாத்து வளர்ப்பு மிக எளிமையானது. மேலும் கோழிகளுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு விடுவதால் நஷ்டம் உண்டாகும். ஆனால் வாதிகளுக்கு நோய் தோற்று ஏற்படுவது குறைவு.

 

 

Comments