Chennai - Tiruvallur - Kanchi Districts Rain Update for the day

By Tamil Nadu Weatherman on 14 Nov 2017
Good spell of on and off rains to occur in the day. Rains will reduce from tomorrow. Today will be the last spell of rains from this low which is moving up north away from us
===============
Chennai to see on and off rains till night with occasional increase in intensity here in and there
----------
Radar shows massive clouds close to Chennai coast. Typically what it showed yesterday night. But the scenario is different. Please see the image attached, you may get some idea what i am trying to explain. The one east of us will move down but when the low moves up, the next spin will result in northern bands will fall over Chennai. At the same time it will drag the temp vortex away from us, as the main low makes a spin.

Enjoy another awesome monsoon rainy day. It was coolest day of the year with just 25 C. Would you believe 25 C in the day.

Pull effect rains from outer bands
---------------
Yesterday night Ramanathapuram got pull effect rains from the pull effect rains from the system.

Today the pull effect will be little up too as the low has moved up. Ramanathapuram, Sivaganga, Pudukottai, Thiruvarur and if lucky Nagai belt can get pull effect rains. Some part of Nilgiris, Kovai, Dindigul will get pull effect rains. Not widespread. So dont expect too much from pull effect rains.

*********************************

சென்னையில் இன்று முழுவதும் அவ்வப்போது இடைவெளி விட்டு மழை பெய்யும். நாளை முதல் மழை குறையத்தொடங்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து நமக்கு இன்றுதான் கடைசிகட்ட மழை கிடைக்கும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.
=========================
சென்னையைப் பொருத்தவரை இன்று இரவு முழுவதும் அவ்வப்போது மழை இடைவெளிவிட்டு பெய்யும். ஒரு சிலநேரங்களில், ஆங்காங்கே கனமழையும் பெய்யக்கூடும்
---------------------
சென்னை கடற்கரைப்பகுதிக்கு அருகே மிகப்பெரிய மேகக்கூட்டம் வந்திருப்பதை ராடார் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு தெரியும். இதேபோன்ற மேகக்கூட்டங்கள்தான் நேற்று இரவும் இருந்தது. ஆனால், இன்று நிலைமை வேறு.

நான் இணைத்துள்ள படங்களைப் பார்தால் நான் என்ன சொல்ல வருகிறேனோ அது குறித்து உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலே நகர்ந்து வரும் அதே வேளையில், நம்முடைய கிழக்குப்பகுதியை நோக்கியும் தாழ்ந்து செல்வது தெரியும். இதன் மூலம் சென்னையின் வடபகுதிமீது மேகக்கூட்டங்கள் பரவலாகும்.

ஆதலால், சென்னையில் இன்று முழுவதும் பெய்யும் மழையை அனுபவியுங்கள். இந்த ஆண்டிலேயே இன்றுதான் மிகவும் குளிர்ச்சியான நாளாக இருக்கப்போகிறது. 25 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்கிறது. சென்னையில் 25 டிகிரி செல்சியஸ் என்றால் நம்ப முடிகிறதா.
.
ராமநாதபுரம் பகுதியில் மழை..
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதன் காரணமாக, ராமநாதபுரம் பகுதியில் மழை இருந்தது. இன்று இதேசூழல் இருப்பதால், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை இருக்கும். மழை பரவலாக இருக்காது. அதிகமான மழையையும் எதிர்பார்க்க முடியாது.

Thank you Mr.Pothy Raj for Tamil translations.