Another Semma day for Thunderstorms in many district for Tamil Nadu, This time more or less confirmed rains in Chennai even in the core part of the city

By Tamil Nadu Weatherman on 16 Aug 2017
Mettur inflow is at year high of over 10000 cusecs as of today morning.
=============================
In Western Tamil Nadu - Coimbatore, Erode, Nilgiris will get rains. Tiruppur too will get some rains.

South Tamil Nadu - Dindigul - Kodaikanal Belt, Sivaganga, Pudukottai and Madurai will get rains.

Delta Region - Tiruvarur, Thanjavur, Nagai and Trichy belt will get rains

North Interior TN - Dharmapuri, Krishnagiri, Salem, Vellore, Tiruvannamalai, Villupuram will get another spell of rains. Cuddalore too in the coast can get some rains.

Mysore - Bangalore - Krishangiri - Dharamapuri - Vellore and Tiruvannamali might see another very active day. There are good chances of heavy rains in these districts. Some places in Western district

Chennai and associated areas.
--------------
Too perfect day for Chennai, Tiruvallur, Kancheepuram districts. Perfect heat with convergence of winds associated with Sea breeze is going to be the trigger for rains. Overhead formation of clouds and rains are possibility. Chennai should not miss rains today.

Enjoy the rains. Its been one of the dream days for Tamil Nadu for past 10 days. From Deficient rainfall, Tamil Nadu has gone into excess....no no...huge excess category.

*****************************************

தமிழகத்தின் பல மாவட்டங்கலில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த முறை சென்னைநகரப் பகுதிகளிலும் மழை வருவதற்கு வாய்ப்பு உண்டு. காலையில் நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருக்கிறது.
========================
தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை, நீலகரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். திருப்பூரில் மழை பெய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திண்டுக்கல், கொடைக்கானல் பகுதி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் மழை பெய்யக்கூடும்.

டெல்டா பகுதிகளான திருவாருர், தஞ்சை, நாகை, திருச்சி மாவட்டங்களிலும் மழை பொழிவு ஏற்படும். தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். கடலூரிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மைசூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.
சென்னைக்கான மழை அறிவிப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் நல்ல காற்று வீசிவருவதால், மழை பொழிவை உண்டாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. சென்னையில் இன்று மழை பெய்யும் வாய்ப்பை இழந்துவிடாது என்றே நினைக்கிறேன்.

கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து விவசாயிகளின்கனவை நனவாக்கி வருகிறது. பற்றாக்குறை மழை பொழிவு என்ற நிலையில் இருந்து அபரிமிதம் என்ற நிலைக்கு மழை வர வேண்டும்.. ஆனால், அளவுக்கு அதிகம் என்று வேண்டாம்.

Tamil Translation courtesy Mr.Pothy Raj.