15 கோடி விவசாகிகள் பயன் பெறும் வகையில் புதிய திட்டம்: வீர மரணமடைந்த படைவீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை: பிரதமர் மோடி அறிவுப்பு

By KRISHI JAGRAN on 03 Jun 2019 | read
    027

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய மக்கள் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மோடி தலைமையிலான அரசு புதிய அமைச்சர்களுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு சில நல திட்டங்களை அறிவித்துள்ளது.

15 கோடி விவசாகிகளுக்கு ரூ 6000 /- நிதியுதவி   

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் விவசாகிகளுக்கு ரூ 6000 /- நிதியுதவி திட்டத்தினை அறிவித்தது. 2 ஏக்கர் பரப்பளவுக்கு கீழ் நிலம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தினால் பயன் அடைந்தார்கள். இதன் மூலம் நாடு முழுவதிலும் இருந்து 12 கோடி விவசாகிகள்  நிதியுதவி பெற்றனர்.

மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, மேலும் அதிக அளவிலான விவசாகிகள் பயன் பெறும் வகையில் சிறு மற்றும் குறு விவசாகிகள்   பயன் பெறும் வகையில் இத்திட்டம் இருக்கும் என அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 15 கோடி விவாசகிகள் பயனடைய உள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டம்

சிறு மற்றும் குறு விவசாகிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்தார். அதன்படி 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து விவசாகிகளும் இதில் இணையலாம். அவர்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு இணையான தொகையினை அரசும் செலுத்தும். 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ 3000 /- ஓய்வூதியமாக வழங்கப்படும். இதே போன்று சிறு வியாபாரிகளும் இத்திட்டத்தில் இணையலாம்.

கல்வி உதவித்தொகை

வீரமரணம் அடைத்த படைவீரர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. தற்போது இந்த உதவித்தொகையினை உயர்த்தி உள்ளது. அதன்படி மரணமடைந்த வீரர்களின் பெண் குழந்தைகளுக்கு  உதவித்தொகையாக ரூ 2500 /- இல் இருந்து  ரூ 3000/-  ஆக உயர்த்தி உள்ளது. அதே போன்று ஆண் குழந்தைகளுக்கு ரூ 2000 /- இல் இருந்து ரூ 2500 /- ஆக உயர்த்தியுள்ளது.

மாநிலங்களின் பாதுகாப்புக்காக உயிரிழக்கும் காவல் துறையினருக்கும் விரைவில் இத்திட்டத்தினை அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran 

 

Comments